மோசடிக்காரர்களை மாயமாக்கும் 'மேஜிக்காரர்' மோடி: ராகுல்

  SRK   | Last Modified : 22 Feb, 2018 09:04 am


தேர்தல் பிரச்சாரத்துக்காக மேகாலயாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தாக்கி பேசினார். 

சமீபத்தில் வெளியான பஞ்சாப் நேஷனல் வங்கி, நிரவ் மோடி மோசடி விவாகரத்தை வைத்து மத்திய அரசை தொடர்ந்து தாக்கி வரும் ராகுல் காந்தி, மோசடிக்காரர்கள் தொடர்ந்து மோடி அரசில் தப்பித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

"மோடி ஒரு மேஜிக்காரர். அவரது ஆட்சியில் மெகா ஊழல் மன்னன்கள் காணாமல் போகிறார்கள். லலித் மோடி, விஜய் மல்லையா தொடர்ந்து இப்போது நிரவ் மோடி. எல்லாம் திடீரென பல ஆயிரம் கோடி மோசடிக்கு பிறகு காணாமல் போகிறார்கள். பின்னர் மேஜிக் செய்தது போல, வெளிநாடுகளில் உதயமாகிறார்கள். கூடிய விரைவில், ஜனநாயகத்தையும் பிரதமர் மோடி மாயமாக்கி விடுவார்" என்றார் ராகுல். 

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் வரும் 27ம் தேதி தேர்தல் வரவிருக்கிறது. 3 முறை தொடர்ந்து அங்கு ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் கட்சி, 4வது முறையும் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close