டெல்லியில் தொடரும் பரபரப்பு...ஆம் ஆத்மி, பா.ஜ.கவினரின் கண்டன போராட்டம்

  முத்துமாரி   | Last Modified : 22 Feb, 2018 01:42 pm


டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டிற்கு வெளியே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பா.ஜ.கவினரும் டெல்லி துணை முதல்வர் சிசோடியா வீட்டிற்கு வெளியே கண்டன போராட்டம் நடத்துகின்றனர். 

டெல்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் தன்னை ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக அம்மாநில ஆளுநர் அனில் பைஜாலிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜார்வால் கைது செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து மற்றொரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் காவல்துறையில் சரணடைந்தார். இதனையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 


இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை எந்த பதிலும் கூறாமல் நழுவி வருகிறார். 

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர், இந்த சம்பவத்தை பா.ஜ.க தான் வேண்டுமென்றே தலைமை செயலரை தூண்டி விட்டு அரசியலாக்கி வருகிறது என்று கூறி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதே சமயத்தில் ஆம் ஆத்மியின் இந்த போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.கவின் மனோஜ் திவாரி தலைமையில், டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டின் வெளியே பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி கண்டித்து போராட்டம் நடத்துவதால் டெல்லியில் அரசியல் நிலவரம் மிக மோசமாகி வருவதாக பேசப்படுகிறது.

இதற்கிடையே, தலைமைச் செயலாளரைத் தாக்கியதைக் கண்டித்து, தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் டெல்லி அரசின் சார்பில் நடைபெறும் கூட்டங்களை தவிர்த்து வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close