அமித் ஷா வீட்டில் சோதனை செய்வீர்களா? - கெஜ்ரிவால் கேள்வி

  SRK   | Last Modified : 23 Feb, 2018 09:28 pm


டெல்லி மாநில எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர், தலைமை செயலாளரை தாக்கிய விவகாரம் மிகவும் வருத்தத்திற்குரியதாக, டெல்லி ஆளுநர் அனில் பைஜால் இன்று கூறினார். அதேநேரம், தனது வீட்டில் போலீசார் சோதனை செய்ததை குறிப்பிட்டு, நீதிபதி லோயா வழக்கில், அமித் ஷா வீட்டில் இதுபோல டெல்லி போலீசார் சோதனை செய்வார்களா, என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இரு தினங்களுக்கு முன், டெல்லி தலைமை செயலாளர், முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்கு இரவு அவசர சந்திப்பு என அழைக்கப்பட்ட போது, அவரை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இரண்டு இளம் எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக தாக்கியதாக அவர் புகார் அளித்தார். 

இந்த புகாரை ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஒரு எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார், மற்றொருவர் சரணடைந்தார் 

மத்திய அரசு போலீசை வைத்து ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை திட்டமிட்டு களங்கப்படுத்துவதாக அக்கட்சி கூறி வந்தது. இதன்பிறகு, முதல்வர் கெஜ்ரிவாலின் ஆலோசகர் ஒருவர் முதலில் இந்த சம்பவம் நடக்கவில்லை என கூறிய நிலையில், பின்னர் தங்களிடம் மாற்றி வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை செய்த போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகள், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை இன்று பறிமுதல் செய்தனர். 

இந்த விவகாரம் குறித்து பேசிய டெல்லி ஆளுநர் பைஜால், நடந்த சம்பவங்கள் மிகவும் வருந்தத்தக்கவை என தெரிவித்துள்ளார். 

தனது வீட்டில் போலீசார் சோதனை செய்ததை குறிப்பிட்டு பேசிய முதல்வர் கெஜ்ரிவால், "நீதிபதி லோயா வழக்கில், அமித் ஷாவின் வீட்டில் இதேபோல போலீசார் சோதனை செய்வார்களா" என கேள்வி எழுப்பியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close