• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ராகுல்காந்தியை சந்தித்து பேசிய கனடா பிரதமர்

  Sujatha   | Last Modified : 24 Feb, 2018 08:30 am


இந்தியா வந்துள்ள கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ நேற்று மாலை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் எட்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தாஜ்மஹால், காந்தி நினைவு இல்லம், போன்ற இடங்களுக்கு சென்ற இவர் பின்னர் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை குடியரசு தலைவர் மாளிகைக்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி வரவேற்றார். 

பின்னர் டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்ட ராகுல் அதில் "மிகவும் நட்பு  ரீதியில் அமைந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானது. இந்த சந்திப்பில் இருநாடுகளின் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்க பட்டுள்ளதாக" ராகுல் தெரிவித்துள்ளார். 


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close