இந்தியா வந்துள்ள ஜோர்டான் மன்னர்: மோடி வரவேற்பு

  Sujatha   | Last Modified : 28 Feb, 2018 05:34 am


அரசு முறை சுற்றுப்பயணமாக நேற்றிரவு இந்தியா வந்துள்ள ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை இந்திய பிரதமர் மோடி, டெல்லி விமான நிலையம் சென்று வரவேற்பளித்தார்.

இந்த பயணத்தின் முக்கிய பங்காக இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு குறித்து பேச்சுவார்த்தை நடைப்பெற உள்ளது. வியாழக்கிழமை  இந்திய இஸ்லாமிய மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் பிரதமர் மற்றும் கிங்  கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள். பாலஸ்தீனிய பிரச்சனை மற்றும் பயங்கரவாதம், தீவிரமயமாக்கல் மற்றும் தீவிரவாதத்தை சமாளிக்க வழிகள் ஆகியவை பேச்சுவார்த்தைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  

பாலஸ்தீனம் உட்பட மேற்கு ஆசியாவின் பயணத்தின் ஒரு பகுதியாக மோடி ஜோர்தானுக்கு பயணம் செய்த மூன்று வாரங்களுக்கு பின் ஜோர்டானிய மன்னர் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close