கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் கிடைக்குமா? - ப.சிதம்பரம் ஆலோசனை

  முத்துமாரி   | Last Modified : 01 Mar, 2018 02:00 pm


கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனு குறித்து ப.சிதம்பரம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் நேற்று(பிப்.28) சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவரை நேற்று விமானம் மூலமாக டெல்லிக்கு கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து அவர் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ,  காவலில் வைத்து வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில், நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது. அதன்படி இன்று ஒருநாள் அவர் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.  மேலும் சில நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க இருக்கிறது.


இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் கைதானதை தொடர்ந்து, அவரது தந்தையும்,  மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு அவசர அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார். இன்று காலையில் அவர், மனைவி நளினி மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் பெறுவது குறித்து அவர்கள் ஆலோசித்து வருவதாகவும், இன்றைய நீதிமன்ற விசாரணையின் போது கார்த்தியின் ஜாமின் மனு தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் கார்த்திக்கு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டாலும் அது நிராகரிக்கப்படவே அதிகமான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய சிபிஐ விசாரணையின் போது, கார்த்தி சிதம்பரம் கடுமையான கோபத்துடன் நடந்து கொண்டதாகவும், அதிகாரிகள் என்று கூட நினைக்காமல், 'அமைச்சரான பிறகு உங்களை பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் விமானத்தில் வரும் போது, 'நான் சாதாரண வகுப்பில் பயணிக்க மாட்டேன், சொகுசு வகுப்பில் தான் வருவேன்' என்று கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. இதனாலே அவருக்கு ஜாமின் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது. எனினும் இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு பிறகு தான் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்படுமா? அல்லது சிபிஐ காவல் நீடிக்கப்படுமா? என்பது குறித்து தெரிய வரும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close