கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடி அறிமுகம்!

  முத்துமாரி   | Last Modified : 31 Jul, 2018 02:13 pm

கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடி ஒன்றை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகம் செய்துள்ளார். 

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து வரும் அம்மாநில அரசு, நாட்டுக்கென தேசியக்கொடி இருந்தாலும், கர்நாடக மாநிலத்திற்கென ஒரு தனிக்கொடி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது வந்தது. கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில், கொடியை உருவாக்க ஒரு குழுவை அமைத்து, தனிக்கொடியை உருவாக்கி இன்று அறிமுகம் செய்துள்ளார் அம்மாநில முதல்வர். 

இந்த கொடி மூவர்ணங்களை கொண்டுள்ளது. மேலே மஞ்சள் நிறமும், நடுவே வெள்ளை நிறமும், கீழே சிவப்பு வண்மும் உள்ள இந்த கொடியின் நடுப்பகுதியில் கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close