கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை

  முத்துமாரி   | Last Modified : 09 Mar, 2018 02:55 pm


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

கார்த்தி சிதம்பரம் தரப்பில் கடந்த மார்ச் 5ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமலாக்கத்துறை அனுப்பிய அனைத்து சம்மன்களையும் ரத்து செய்ய வேண்டும், அமலாக்கத்துறை தன்னை விசாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள்  இடம்பெற்றிருந்தன. 

இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள், "மார்ச் 20ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யக் கூடாது. அதேபோல் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர். 

இதனையடுத்து, சிபிஐ காவல் முடிந்து கார்த்தி சிதம்பரம் இன்று டெல்லி பட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close