பாஜக அம்மா-பிள்ளைக்கான கட்சி அல்ல: சோனியாவுக்கு கட்காரி பதிலடி!

  PADMA PRIYA   | Last Modified : 10 Mar, 2018 02:14 pm

பாஜக ஒரு நபரை சார்ந்த அல்லது அம்மா - பிள்ளைக்கான கட்சி அல்ல என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார். 

மும்பையில் நடந்த இந்தியா டுடே கான்க்ளேவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, ''பாஜக என்றுமே ஒருவரை சார்ந்த கட்சி அல்ல. அம்மா - பிள்ளைக்கான கட்சியும் அல்ல. வாஜ்பாயில், அத்வானி, அமித் ஷா போன்ற தனிப்பட்ட நபருடையது அல்ல. பாஜக லட்சோப லட்ச தொண்டர்களுடையது. இதனை சுறுக்கி விடவே முடியாது. 

காங்கிரஸ் நடந்துவரும் ஒவ்வொரு மாநில தேர்தல்களிலும் தோற்று பலத்தை இழந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க வேண்டாம் '' என்று கூறினார். 

நேற்று இதே நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பதில் கூறும்வகையில் இதனை கட்காரி குறிப்பிட்டார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close