கருணை மனுவை தடுத்தவர்கள் மன்னித்துவிட்டேன் என்பதா? - ராகுலுக்கு இல.கணேசன் கண்டனம்

  PADMA PRIYA   | Last Modified : 11 Mar, 2018 09:48 pm

காங்கிரஸ் ஆட்சியில் கருணை மனுவைக்கூட ஏற்க முடியாது என்றவர்கள், இப்போது கொலையாளிகளை மன்னித்ததாக கூறுகின்றனர் என்று பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். 

சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலிடம் செய்தியாளர்கள், உங்கள் தந்தையை கொன்ற குற்றவாளிகளை மன்னித்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல், "எனது தந்தையைக் கொலை செய்தவா்கள் மீது நானும், சகோதரி பிரியங்கா காந்தியும் மிகுந்த கோபத்தில் இருந்தோம். அந்த வேதனையில் இருந்து மீள்வதற்கு நாங்கள் மிகுந்த காலம் எடுத்துக் கொண்டோம். ஆனால் அவா்களை தற்போது மன்னித்து விட்டோம்" என பதிலளித்திருந்தார்.

ராகுலின் இந்த மனமாற்றத்தால், சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க அவர் ஒப்புக்கொள்வாரா என்ற விவாதம் எழத் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில் பா.ஜ.க மூத்தத் தலைவரான இல.கணேசன் புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னிப்போம் என்று ராகுல் காந்தி கூறுவது ஏற்புடையதல்ல. காங்கிரஸ் ஆட்சியில் கருணை மனுவைக்கூட ஏற்கக்கூடாது என தடுத்தவர்கள் தற்போது மன்னித்ததாக கூறுவது தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் செயல். காங். ஆட்சியில் கருணை மனுவைக்கூட ஏற்கக்கூடாது என தடுத்தவர்கள் தற்போது மன்னித்ததாக கூறுகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி தொடங்கிவிட்டது. மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் விருப்பமும் கூட. சிலர் அரசியல் ஆதாயத்துக்காக தவறான கருத்துக்களை கூறுகின்றனர்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close