பீகார் பயங்கரவாத மையமாக மாறும்: பா.ஜ.க அமைச்சர் எச்சரிக்கை

  முத்துமாரி   | Last Modified : 16 Mar, 2018 11:40 am


பீகாரின் அராரியா தொகுதி பயங்கரவாதிகளின் மையமாக மாறும் எனப் பீகார் மாநில பா.ஜ.க அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

பீகாரில் மக்களவை தொகுதியான அராரியா, சட்டமன்ற தொகுதிகளான பப்புவா, ஜெகனாபாத் ஆகியவற்றுக்குச் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் பப்புவா தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றது. அராரியா மற்றும் ஜெகனாபாத் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அராரியா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சர்ப்ராஸ் ஆலம், பா.ஜ.கவின் பிரதீப் குமார் சிங்கை விட 60,000 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்துப் பீகார் மாநில பா.ஜ.க அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், "ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெற்றி பெற்றது பீகாருக்கு மட்டுமல்ல. இந்தியாவுக்கே ஆபத்து. இதன்மூலம் பீகாரில் இனவாத கருத்துக்கள் உருவாகும். பீகார் பயங்கரவாதிகளின் சொர்க்கமாக மாறும்" எனத் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close