லிங்காயத்துக்கள் இனி இந்துக்கள் இல்லை... தனி மதமாக அங்கீகரிப்பு!

  முத்துமாரி   | Last Modified : 19 Mar, 2018 05:17 pm


லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அரசு அங்கீகரித்துள்ளது. மேலும் இது மத்திய அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பபட்டுள்ளது. 

கர்நாடகாவில் 'லிங்காயத்' என்ற சமூக மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் முழுதுவமாக சைவ கோட்பாட்டை முன்மொழிந்து சிவனை லிங்க வடிவில் வழிபடுபவர்கள். இந்த சமூகத்தினர், தங்களை இந்து மதத்தில் சேர்க்கக்கூடாது. தங்களுக்கென தனி மதம் வேண்டும் என பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வந்தனர். இதை சில இந்து அமைப்புகள் எதிர்த்த நிலையில், கர்நாடக அரசு இதனை ஏற்றுக்கொண்டது. இதற்காக நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான  கமிட்டியை அமைத்தது.

இந்த நிலையில் நாகமோகன் தாஸ் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அரசு இன்று அங்கீகரித்துள்ளது. மேலும் இது மத்திய அரசின் பரிந்துரைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வருவதால் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். லிங்காயத் சமூகத்தினர் பா.ஜ.கவிற்கு ஓட்டளிக்க கூடாது என்ற எண்ணத்தில் காங்கிரஸ் செயல்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர். எனவே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இதற்கு ஒப்புதல் அளிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close