சமீபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையை கேட்டு, கோவா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் ஷந்தாராம் நாயக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு, கோவா காங்கிரஸ் தலைவராக நாயக் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பதவியேற்று ஓராண்டு கூட ஆகாத நிலையில், திடீரென ராஜினாமா செய்தார். மூத்தவர்கள் இள ரத்தத்துக்கு வழிவிட வேண்டும் என காங்கிரஸ் பொதுக்கூட்டதில் ராகுல் காந்தி பேசினார். அதை கேட்டு, 71 வயதான நாயக் இந்த முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியபோது, "மூத்த தலைவர்கள், இளம் தலைமுறையினருக்கு வழிவிட வேண்டும். தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை உடைப்பது தான் எனது முதல் பணி" என்றும் ராகுல் பேசியிருந்தது குறிப்பிபடத்தக்கது.