• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முட்டுக்கட்டை: சித்தராமையா - கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 22 Mar, 2018 11:22 am

கர்நாடக எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடக்கிறது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முட்டுக்கட்டைப் போடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.  நீரை ஒதுக்கீடு செய்தது.

அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வாரியம் அமைந்தால் காவிரி அணைகளை கட்டுப்படுத்தும் உரிமை கர்நாடக அரசுக்கு இருக்காது. இதனால், காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசும் அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்க்கின்றனர்.


இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி விவாதிக்க கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை டெல்லியில் கடந்த 16-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கூட்டம் கடைசி நேரத்தில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது. மேலும் ரத்து செய்யப்பட்ட இந்த கூட்டம் வருகிற 22-ந்தேதி (அதாவது இன்று) நடைபெறும் என்று சித்தராமையா அறிவித்திருந்தார்.

அதன்படி மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது. சித்தராமையா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தேவே கவுடா, எடியூரப்பா உள்பட அனைத்துக்கட்சிகளின் எம்.பி.க்களும் கலந்து கொள்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு அழுத்தம்:

ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்கான தீர்மானம் ஒன்றையும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. யார் சொல்வதை மத்திய அரசு கேட்கப்போகிறது என்பது தெரியவில்லை. இதற்கு இம்மாத இறுதி வரை காத்திருக்க வேண்டி உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close