காவிரி மேலாண்மை வாரியம் கூடாது: கர்நாடக எம்.பிக்கள் தீர்மானம்

  PADMA PRIYA   | Last Modified : 23 Mar, 2018 11:55 am

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில், கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சி எம்பிக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நேற்று நடந்த அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை மாநில நீர்வளத்துறை நேற்று மாலை கூட்டியது. பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், மத்திய அமைச்சர் அனந்தகுமார், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உட்பட காங்கிரஸ், பா.ஜ.க, ம.ஜ.த எம்.பி- க்கள் பங்கேற்றனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில், கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சி எம்பிக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சட்ட நிபுணர்களின் அறிவுரையின் பேரில், காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதில்லை எனவும் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்க‌ப்பட்டது" என அவர் தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close