பெங்களூரு சாலையில் புர்காவில் சென்ற சசிகலா?- முன்னாள் டிஐஜி ரூபா மொட்கில் தகவல்!

  PADMA PRIYA   | Last Modified : 23 Mar, 2018 02:20 pm


பெங்களூரில் உள்ள எம் ஜி சாலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் கைதியாக இருக்கும் சசிகலா, புர்கா அணிந்து கொண்டு உலாவியதாக தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கர்நாடக சிறைத்துறையின் முன்னாள் டிஐஜி ரூபா மொட்கில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பி.பி.சி தமிழ் இணைய செய்தியின் பேஸ்புக் பக்கத்துக்க்கு அளித்த பேட்டியில்,  "சசிகலாவும், இளவரசியும் வெளியே சென்றதை நான் பார்க்கவில்லை. அப்படி பார்த்திருந்தால் அதனை, அவருக்கு சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து நான் தாக்கல் செய்த அறிக்கையில் அதனையும் குறிப்பிட்டிருப்பேன். 

ஆனால் அவர் புர்கா அணிந்தபடி பெங்களூருவின் பிரதான எம்.ஜி சாலையில் சென்றதை பார்த்ததாக தொழிலாளர் சங்க தலைவர் முத்துமாணிக்கம் என்பவர் தன்னிடம் வந்து சொன்னார். சசிகலா, இளவரசி இருவரையும் புர்காவோடு எம்.ஜி. சாலையில் பார்த்ததாகவும், அதனை அவர் எழுத்துப்பூர்வமாகவும் என்னிடம் தெரிவித்தார் என ரூபா குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,  "சசிகலா வெளியே சென்றது பற்றி எந்த தடயமும் தன்னிடம் இல்லை. ஆனால், தனக்கு கிடைத்த வீடியோ பதிவு ஒன்றில், சசிகலாவும், இளவரசியும் பட்டுப் புடவைகள் உடுத்திக்கொண்டு, பொருட்கள் வாங்கிய பையோடு சிறைக்கு வருவது தெரிகிறது. எனவே, அவர்கள் வெளியே சென்றார்களா என்பது குறித்து பின் வரும் நாளில் விசாரிக்கப்படலாம். என்னிடம் கிடைத்த தகவல்களை விசாரணைக்காக சமர்பித்துவிட்டேன்" என கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close