'என்சிசி என்றால் என்னவென்று தெரியாது'- பதிலால் கலாய்ப்புக்குள்ளான ராகுல்!

  PADMA PRIYA   | Last Modified : 24 Mar, 2018 05:33 pm

மைசூரு கல்லூரியில், என்சிசி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, என்சிசி என்றால் என்னவென்றே தெரியாது என பேசிய ராகுல் காந்தியை, சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினைப் போல் ராகுல் காந்தியை கலாய்த்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மஹாராணி கலை கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு  விருந்தினராக ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். 

"ரூபாய் நோட்டு வாபஸ் தவறான திட்டம். இதனை அமல்படுத்தியிருக்கவே கூடாது. ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை இந்திய பொருளாதாரத்திற்கும், வேலை வாய்ப்புகளுக்கும் பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டதில் பெரிய தவறு உள்ளது. இது ரிசர்வ் வங்கி கவர்னர், தலைமை பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சர் அனைவருக்கும் தெரியும். இந்த திட்டம் பைத்தியகரமானது என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூட என்னிடம் தெரிவித்தார்.


22 ஆயிரம் கோடி வங்கி பணத்தை எடுத்து கொண்டு நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார். இந்த பணத்தை உங்களிடம் கொடுத்திருந்தால், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். நாம் பொருளாதார ரீதியில் வளர்ந்தாலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. இதற்கு திறமையுள்ளவர்களுக்கு பணம் மற்றும் ஆதரவு கிடைக்கவில்லை. பெரும்பாலான பணம் குறிப்பிட்ட 15 - 20 நபர்களுக்கு மட்டுமே சென்றது" என்றார். 

அப்போது மாணவி ஒருவர், என்சிசி-யில் 'சி' சான்றிதழ் பெற்றால் எத்தகைய பலன்களை உங்களது கட்சி அளிக்கும் என்று கேள்வியெழுப்பினார். அதற்கு ராகுல், இது குறித்து எனக்கு கொஞ்சமும் தெரியாது. அதனால் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றார். 

இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பெரும் கலாய்ப்புக்குள்ளாகி இருக்கிறது. 

* இத்தாலியில், என்சிசி இல்லையோ!

*என்சிசி தொடர்பான நிகழ்ச்சிக்கு வரும்போது, அது குறித்து தெரிந்தாவது வைத்திருக்க வேண்டாமா?

*இது கூட தெரியாத நபர் தான், பொருளாதாரத்தையும் பாதுகாப்புத்துறை பற்றியும் பேசுகிறாரா? என அடுக்கடுக்கான கலாய்ப்புகளுக்கு  ராகுலின் பேச்சு இட்டுச்சென்றுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close