10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதாரம் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்- சிபிஎஸ்இ

  முத்துமாரி   | Last Modified : 28 Mar, 2018 05:23 pm


தேர்வுத்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து 10ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் பாடங்களுக்கான தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ இன்று அறிவித்துள்ளது. 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 12ம் வகுப்பு பொருளாதாரம்(Economics) பாடத்தேர்வு 26ம் தேதி நடைபெற்றது. தேர்விற்கு முன்பாக இதன் தேர்வுத்தாள் வெளியானதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிபிஎஸ்இ-யிடம் புகார் அளித்தனர். 

இதேபோல் இன்று(மார்ச்.28) 10ம் வகுப்பு கணிதம் தேர்வு நடைபெற்றது. ஆனால் நேற்று இரவு இதன் வினாத்தாள்கள் வெளியானதாக புகார் வந்தன. இன்று காலை தேர்வு எழுதிய மாண்வர்கள் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக கூறியிருந்தனர். 

இந்த நிலையில் புகார்களின் அடிப்படையிலும், மாணவர்களிடையே நம்பகத்தன்மைக்காகவும் 10ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் பாடங்களுக்கான தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்த தேர்வுகளுக்கான புதிய தேதிகள் ஒரு வார காலத்திற்குள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆனால் சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிப்பை எதிர்த்து சில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close