மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால்! - வழக்கை வாபஸ் பெற்றார் அருண் ஜெட்லி

  முத்துமாரி   | Last Modified : 02 Apr, 2018 07:48 pm


கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் செய்ததாக அருண் ஜெட்லி மீது தவறாக குற்றம் சாட்டியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோரியுள்ளார். 

டெல்லி கிரிக்கெட் சங்கத்தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்தபோது, ஊழலில் ஈடுபட்டார் என கடந்த 2015ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.  இதற்கு எதிராக ஜெட்லி, கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால், அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஞ்சய் சிங், அஸ்தோஷ் மற்றும் ராகவ் சதா ஆகியோரும் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதற்காக கெஜ்ரிவால் உள்ளிட்ட நால்வரும்  அருண் ஜெட்லிக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளனர். 

அந்த கடிதத்தில், "ஊடகத்தில் வந்த செய்திகளை வைத்து உங்களை தவறாக விமர்சித்துவிட்டோம். நாங்கள் கூறிய குற்றசாட்டை திரும்ப பெற்று அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்களின் இந்த மன்னிப்பை ஏற்று அவதூறு வழக்கை வாபஸ் பெற்று இந்த பிரச்னையை முடித்து வைக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னிப்பு கடிதத்தின் அடிப்படையில், அருண் ஜெட்லி வழக்கை வாபஸ் பெற உள்ளத்தாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக கெஜ்ரிவால், பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மஜிதியா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. 

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கெஜ்ரிவால் அனுப்பிய கடிதம் கீழே..


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close