ஏப். 12ல் பிரதமர் மோடி உண்ணாவிரதம்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2018 08:49 pm

பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற விடாமல் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கிய எதிர் கட்சிகளை எதிர்த்து பிரதமர் மோடி உட்பட பா.ஜ.கவினர் ஏப்ரல் 12ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6ம் தேதி முடிவடைந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வந்தது. இதனால் 250 மணிநேரங்கள் வீணாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், ஏப்ரல் 12ம் தேதி பிரதமர் மோடியும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் தனது அலுவலகம் செல்வார் எனவும் அங்கு எதையும் உண்ண மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று  மத்திய அரசை எதிர்த்து மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close