கதுவா வன்கொடுமை சம்பவம்: உடையுமா பி.டி.பி. - பா.ஜ.க கூட்டணி?

  Padmapriya   | Last Modified : 14 Apr, 2018 03:41 pm

கதுவா வன்கொடுமை விவகாரத்தால், காஷ்மீரில் இரு பா.ஜ.க அமைச்சர்கள் ராஜினாமா செய்ததையடுத்து ஆளும் பி.டி.பி. - பா.ஜ.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் பி.டி.பி.எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடத்துகிறது. முதல்வராக பி.டி.பி. கட்சியின் மெகபூபா முப்தி உள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில், காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்ப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடெங்கும் இதற்கான கண்டன குரல்கள் எழுந்துள்ளன.

நிலைமை சூடுபிடிக்கவே நேற்று பா.ஜ.கவைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆனால் இதற்கு காஷ்மீர் பா.ஜ.க தலைமை மறுப்பு தெரிவித்துள்ளது. கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. பிளவும் இல்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் மெகபூபா முப்தி தனது பி.டி.பி. கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சிறுமி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பா.ஜ.க மௌனம் சாதிப்பதும் நீதியை நிலை நாட்டாமல் காலம் தாழ்த்துவதும் மிகப் பெரிய விளைவுகளைக் கொண்டுவரும். எனவே பா.ஜ.க கூட்டணியை இத்துடன் முடிவுக்கு கொண்டுவருவது அவசியம் என ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

விரைவில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மெகபூபா அறிக்கை வெளியிட உள்ளார். இதனால் கூட்டணி நீடிக்குமா என்பது மெகபூபாவின் அடுத்தகட்ட  செயல்பாட்டை பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close