எனது சகோதரிகளுக்காக இந்த புதிய திட்டம்: சந்திரபாபு நாயுடு நெகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2018 06:12 pm


கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு புதிய திட்டத்தை நாளை அறிமுகப்படுத்த உள்ளார். 

முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை அவரது பிறந்தநாளையொட்டி, 'சந்திரன்னா பெல்லி கனுக்கா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். இத்திட்டத்தின் மூலம் கலப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 பரிசாக அளிக்கப்படுகிறது. 

திட்டம் குறித்து சந்திரபாபு நாயுடு தெரிவித்ததாவது:

ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு திருமணம் என்றாலே பெற்றோர்களுக்கு சுமை தான். பெற்றோர்களின் அத்தகைய கஷ்டத்தை போக்கும் பொருட்டு ஆந்திர அரசு சார்பில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

அதன்படி, திருமண தம்பதிகளில் ஒருவர் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால் ரூ. 75,000 உதவித்தொகையும், திருமண தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச்  சேர்ந்தவராக இருந்தால் ரூ.50,000, தம்பதிகள் இருவரும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதில் ரொக்கமாகவும், மீதித்தொகை பரிசுப்பொருட்களாகவும் அளிக்கப்படும். 

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புவோர், திருமணத்துக்கு 15 நாள்கள் முன்னதாக அரசின் இணையதளம் மூலமாகவோ அல்லது மொபைல் ஆப் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தினால், ஆந்திராவில் உள்ள சுமார் 1.20 லட்சம் பெண்கள் பயனடைவார்கள். ஒரு சகோதரனாக எனது சகோதரிகளுக்கு இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்துகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close