நீதிபதி லோயா வழக்கில் அரசியல் செய்த ராகுல் காந்தி: பா.ஜ பாய்ச்சல்!

  Newstm Desk   | Last Modified : 19 Apr, 2018 05:50 pm


நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி விசாரணை கோரிய பொதுநல மனுக்களை இன்று உச்ச நீதிமன்ரம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்குகளின் பின்னணியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக, பாரதிய  ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

2014ம் ஆண்டு இறுதியில் மாரடைப்பால் இறந்தார் நீதிபதி லோயா. குஜராத் போலீசாரால் சர்ச்சைக்குரிய முறையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் வழக்கை அவர் அப்போது விசாரித்து வந்தார். இந்த வழக்கில் பா.ஜ தலைவர் அமித் ஷாவும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். 

நீதிபதி லோயா கொலை செய்யப்பட்டிருப்பதாக, பல தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தங்கையும், தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியது. நீதிபதி லோயா வழக்கில் விசாரணை தேவை என பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையின் முடிவில் இன்று வழக்கை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. 

இதைத் தொடர்ந்து, பேசிய பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த வழக்கை வைத்து அரசியல் செய்ததாக குற்றம் சாட்டினார். "நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்குகளில், ஒரு பின்னணி அரசியல் சக்தி உள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டது. அது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் என தெளிவாக தெரிகிறது. ஜனவரி 12ம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தியது யார்?  காங்கிரஸும் ராகுல் காந்தியும் தான்" என்று கடுமையாக குற்றம் சாட்டினார் பாத்ரா.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close