ரூ. 10 கோடி கொடுத்து என்னை பழிவாங்க முயற்சி- பவன்கல்யாண்

  Padmapriya   | Last Modified : 21 Apr, 2018 06:50 pm

ஸ்ரீரெட்டி மூலம் தன்னை களங்கப்படுத்த முயற்சி நடந்து வருவதாகவும் அதற்காக ரூ.10 கோடி பேரம் பேசப்பட்டிருப்பதாகவும் நடிகர் பவன்கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பவன் கல்யாண் கூறுகையில், "ஸ்ரீரெட்டி மூலம் அரசியல் ரீதியாக என்னை களங்கப்படுத்த முயற்சி நடந்து இருப்பது நிரூபணமாகியுள்ளது. இதற்காக ரூ.10 கோடி பேரம் நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அதில் ரூ.5 கோடியை ஸ்ரீரெட்டிக்கு தருவதாக கூறியுள்ளனர். இதன் பின்னணியில் டைரக்டர் ராம்கோபால் வர்மா மட்டுமின்றி சந்திரபாபுவின் மகனும் அமைச்சருமான லோகேசும் இருக்கிறார். சந்திரபாபு நாயுடு மேற்பார்வையில்தான் என்னை பழிவாங்க முயற்சிகள் நடந்துள்ளன"

நடிகர் பவன் கல்யாண் ஜன சேனை என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் பங்கெடுத்துள்ளார். தெலுங்கு பட உலகில் பலர் மீது பாலியல் புகார்களை கூறி தெலுங்கு பட உலகை கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி, கடந்த வாரம், "பவன் கல்யாணை அண்ணனாக கருதிய என்னை செருப்பால் அடித்துக்கொள்கிறேன்" என்று ஆவேசப்பட்டு தன்னை செருப்பாலும் அடித்துக்கொண்டார் ஸ்ரீரெட்டி.

மேலும், "பவன் கல்யாண் பெங்காலி இளம்பெண்களை வைத்து மசாஜ் செய்து கொள்கிறார்" என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் மிரட்டல்களை விடுத்தும் வந்தனர். 

தொடர்ந்து, ஸ்ரீரெட்டி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு ரூ.5 கோடி தருவதாக பின்னால் இருந்து ஒருவர் தூண்டியதால் பவன் கல்யாணை தவறாக பேசியதாகவும் கூறினார். இதனை அடுத்து பவன் கல்யாணுக்கு எதிராக ஸ்ரீரெட்டியை தூண்டிவிட்டது தான்தான் என்று பிரபல தெலுங்கு டைரக்டர் ராம்கோபால் வர்மா கூறியிருந்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close