அமல்படுத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை அவசர சட்டங்கள் என்னென்ன?

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Apr, 2018 07:19 pm


12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், புதிதாக அமல்படுத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை அவசர சட்டங்கள் என்ன சொல்கிறது? என்பதை காணலாம். அதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அனைத்து பாலியல் வன்கொடுமை வழக்குகளும் 2 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  • 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட்டு வன்கொடுமை செய்தால் மரண தண்டனை
  • 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்கொடுமை செய்தால் ஆயுள் தண்டனை
  • 16 வயதுக்குட்பட்ட பெண்களுளை வன்கொடுமை செய்தால், முன் ஜாமீன் மறுக்கப்படுதல்
  • 16 வயதுக்குட்பட்ட பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்கினால் 20 வருட சிறை தண்டனை 
  • பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தபட்ச தண்டனை 7 வருடத்திலிருந்து 10 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close