• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 27ம் தேதி சீனா செல்கிறார்

  Sujatha   | Last Modified : 23 Apr, 2018 06:17 am


சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சீனாவின் வூஹன் நகரில் வருகிற ஏப்ரல் 27 மற்றும் 28 ம் தேதி உச்சி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளனர். இருநாட்டு உறவை மேம்படுத்த இந்த  சந்திப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளதாக  சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி நேற்று அதிகார பூர்வ தகவலை வெளியிட்டார்.  

முன்னதாக, இன்று மற்றும் நாளை நடைபெற உள்ள, 8 நாடுகள் இடம்பெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நேற்றுமுன்தினம் சீனா சென்றுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று  சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியை சந்தித்து பேசிய சுஷ்மா, இருநாட்டு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய சுஷ்மா சுவராஜ், “டோக்லாம் பிரச்சினைக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கான நாது லா பாதை மூடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு நாது லா பாதை வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கும். அதற்கு சீனா ஒத்துழைப்பு தர சம்மதித்துள்ளது” என்றார். 

பின்னர் பேசிய வாங் யி கூறியதாவது: இந்தியா-சீனா இடையே நட்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேசிய இந்திய பிரதமர் மோடி, இருநாட்டு உறவை மேம்படுத்த ஒப்புக்கொண்டனர். தற்போது அதனை அமல்படுத்த பிரதமர் மோடி 27 மற்றும் 28-ந்தேதிகளில் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். வுகன் நகரில், இருவரும் சந்தித்துப் பேசுகிறார்கள். இவ்வாறு வாங் யி தெரிவித்தார்.      

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close