மே 18-ந் தேதி முதல்வராக பதவி ஏற்பேன்: எடியூரப்பா திட்டவட்டம்

  Sujatha   | Last Modified : 30 Apr, 2018 07:26 am


கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அம்மாநில பாஜக தலைவர்  எடியூரப்பா நேற்று கலபுரகியில் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது:  “தேர்தலில் காங்கிரசை நிராகரிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். புதிய கர்நாடகத்தை கட்டமைக்க மக்கள் ஆதரவு வழங்குவார்கள். பிரதமர் மோடி பிரசாரம் செய்ய தொடங்கியதும் பா.ஜனதாவுக்கு இன்னும் கூடுதல் பலம் கிடைக்கும். தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி. பிரதமர் மோடி முன்னிலையில் மே மாதம் 17 அல்லது 18-ந் தேதி நான் முதல்வராக பதவி ஏற்பேன். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் சுமார் 3 அல்லது 4 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். தேர்தலுக்கு பிறகு மத்திய அரசு தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யும்” என்று கூறியுள்ளார்.


ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.