அரசியல் பழிவாங்கும் நோக்கில் டிஸ்சார்ஜ்: லாலு குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 30 Apr, 2018 06:10 pm


அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனே எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார். 

மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிக்கி, சிறைத்தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மருத்துவமனைக்கு சென்று லாலுவிடம் நலம் விசாரித்தார். இதையடுத்து இன்று மதியம் திடீரென லாலு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அப்போது வெளியே வந்து பேசிய லாலு, "அரசியல் நோக்கில் தான் என்னை டிஸ்சார்ஜ் செய்ய நிர்பந்தித்தனர். எனது உடல்நிலை இன்னும் சரியாகவில்லை. அவசரஅவசரமாக இன்று மருத்துவமனையில் இருந்து என்னை வெளியேற்றுகின்றனர்" என்றார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவும் இதனை வழிமொழிந்தார். மேலும் லாலு வெளியே வந்தபோது அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

லாலு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ராஞ்சிக்கு மாற்றப்பட்டது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை எய்ம்ஸ் மருத்துவமனை மறுத்துள்ளது. லாலுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தான் அவரை டிஸ்சார்ஜ் செய்ததாக மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close