முதல்முறையாக வெளிநாடு சுற்றுபயணம் மேற்கொண்டார் வெங்கையா!

  Sujatha   | Last Modified : 07 May, 2018 11:19 am


வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய 3 நாடுகளுக்கு அரசு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். 

6 நாட்கள் 3 நாடுகளுக்கு அரசு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள வெங்கையா நாயுடு, நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு கவுதமாலா நாட்டுக்கு சென்றடைந்தார். அவருடன் மத்திய இணை மந்திரி ஜஷ்வந்த் சிங் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.  அங்கு கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ் மற்றும் துணை ஜனாதிபதியை சந்தித்த அவர், இன்று(திங்கள் கிழமை) பனாமா நாட்டுக்கு செல்கிறார். அங்கு பனாமா ஜனாதிபதி ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இசபெல் செயிண்ட் மாலோ ஆகியோரை சந்திக்கிறார். இங்கு இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை தொடர்ந்து மூன்றாவது கட்ட பயணமாக பனாமாவில் இருந்து பெரு நாட்டுக்கு செல்கிறார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close