குடியரசுத் தலைவர் மாளிகையில் கனடா பிரதமர்; கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி

  PADMA PRIYA   | Last Modified : 24 Feb, 2018 10:36 am

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி கட்டியணைத்து வரவேற்றார். 

இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த  ட்ரூடோவை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் அவருக்கு பாரம்பரிய முறைப்படி முப்படை அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு கனடா பிரதமர், டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் ட்ரூடொவை சந்தித்து பேசினார். 

இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் காலநிலை மாற்றம், விண்வெளி தொழில்நுட்பம், ராணுவ உதவி போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளனர். இதில் ஒப்பந்தங்கள் ஏதும் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக சீக்கியர்கள் பிரச்னை குறித்தும் காலிஸ்தான் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை ட்ரூடோவிடம் மோடி அறிவிப்பார் என்று தெரிகிறது. மேலும் சீக்கிய போராளிகளுக்கு கனடா ஆதரவு அளிப்பது குறித்து மோடி விவாதிப்பார் எனவும் பிரதமர் அலுவலக குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்தியாவில் ஒரு வாரக் காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சுற்றுப் பயணத்தின் 6வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. 

கனடா பிரதமரை மத்திய அரசு புறக்கணிப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு அளித்ததும், மோடி நேரில் சென்று வரவேற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்வாக கருதப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close