• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

ரூ.1 கேட்டு பாஜக எம்.பி மீது பிரகாஷ் ராஜ் வழக்கு

  PADMA PRIYA   | Last Modified : 28 Feb, 2018 09:32 am


சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறான கருத்தைப் பதிவிட்ட பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா மீது ரூ.1 கேட்டு பிரகாஷ் ராஜ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். 

தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா உடனடியாக அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தனக்கு நஷ்ட ஈடாக ஒரு ரூபாய் வழங்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மைசூரு மக்களவை தொகுதி பாஜக எம்.பி.யான பிரதாப் சிம்ஹா பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் குறித்து ட்விட்டரில் கருத்தை பதிவிட்டார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ், உடனடியாக அதுபற்றி விளக்கம் கேட்டு பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

நோட்டீஸுக்கு பிரதாப் சிம்ஹா எந்தவித பதிலும் ஆளிக்கவில்லை என்ற நிலையில் மைசூரு நீதிமன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் தன்னைப்பற்றி அவதூறான கருத்தை பதிவிட்ட பிரதாப் சிம்ஹா உடனடியாக அதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும், மேலும் தனக்கு நஷ்ட ஈடாக ரூ.1 மட்டும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close