'ஸ்விக்கி இல்லனா சோமேட்டோல மீல்ஸ் ஆர்டர் பண்ணுங்க' - கார்த்தி சிதம்பரம்

  முத்துமாரி   | Last Modified : 02 Mar, 2018 02:59 pm


சிபிஐ காவலில் இருக்கும் கார்த்தி சிதம்பரம், 'வீட்டுச்சாப்பாடு இல்லையென்றாலும் பரவாயில்லை, ஸ்விக்கி அல்லது சோமேட்டோ ஆன்லைன் தளத்தில் உணவு ஆர்டர் செய்து கொடுங்கள்' என சிபிஐயிடம்  கோரிக்கை வைத்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், ஏற்கனவே ஒருநாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்ட நிலையில், மேலும் 5 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நேற்று நீதிமன்ற வாதத்தின் போதே, கார்த்தி சிதம்பரம் விசாரணையில் கோபமாக, கடுமையக நடந்துகொள்கிறார் என சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இந்நிலையில் கார்த்தி, நேற்று நீதிமன்றத்தில் வீட்டுசாப்பாடு வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், 'ஸ்விக்கி அல்லது சோமேட்டோ ஆன்லைன் தளத்தில் உணவு ஆர்டர் செய்து கொடுங்கள்' என அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். 

மேலும், அவரது கழுத்தில் உள்ள தங்க செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை கழற்றும்படி சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கும் அவர் மருத்துள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close