மக்களுக்கு பதவியை பறிக்கும் அதிகாரம் வேண்டும்: வருண் காந்தி

  PADMA PRIYA   | Last Modified : 03 Mar, 2018 09:33 am

இந்திய அரசியல் சட்டத்தில், தவறு செய்யும் ஆட்சியாளர்களின் பதவியை பறிக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வருண் காந்தி கூறியுள்ளார். 

கல்லூரி ஓன்றில் நடந்த இளைஞர்கள் மாநாட்டில் பேசிய பாஜக-வை சேர்ந்த வருண் காந்தி, ''நம் மக்கள் அரசியல் குறித்த புரிதலும் தெளிவும் இல்லாது இருக்கின்றனர். தெளிவை ஏற்படுத்த அரசியல் சட்டத்தில் மாற்றம் தேவை. அதில் மாற்றம் இல்லாமல் மக்களின் மனநிலையை மாற்றுவது கடினம். 

மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிகாரம் வேண்டும். தவறு செய்யும் ஆட்சியாளர்களின் பதவியை பறிக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் '' என்று வருண் காந்தி பேசினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close