திரிபுரா இனி வளர்ச்சி நோக்கி செல்லும்: வெற்றி குறித்து ஆதிதியநாத் பெருமிதம்

  PADMA PRIYA   | Last Modified : 03 Mar, 2018 02:28 pm

திரிபுராவில் பாஜக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளதால், இனி அம்மாநிலம்  வளர்ச்சியை நோக்கி செல்லும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இன்று காலை முதல் திரிபுரா வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை தொடக்கத்தில் பாஜக சற்று முன்னிலை வகித்தது. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, பாஜகவை விட கூடுதலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. 

ஆனால் மதிய நேர நிலவரப்படி, பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 59 தொகுதிகளில், 40 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி தற்போது 20 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 

இதுகுறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிகையில், ''திரிபுராவில் பாஜக வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்காக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் கடுமையாக உழைத்துள்ளனர். 25 ஆண்டுகால ஆட்சியை இடதுசாரி கூட்டணி இழந்துள்ளது. அவர்களை திரிபுரா மக்கள் புறக்கணித்துவிட்டனர். இனி திரிபுரா மாநிலம் வளர்ச்சி பெறும்'' எனக் கூறினார்.

திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதனால் ஆம்மாநில  தேர்தல் முடிவகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close