திரிபுராவில் பா.ஜ.க வெற்றி: முதல்வர் மாணிக் சர்க்கார் ராஜினாமா

  முத்துமாரி   | Last Modified : 04 Mar, 2018 02:23 pm


திரிபுராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் மாணிக் சர்க்கார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். 

சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 43 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் கடந்த 25 வருடங்களாக ஆட்சி புரிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 1998 முதல் மாணிக்சர்க்கார் முதல்வராக இருந்து வந்தார். மிகவும் எளிமையானவர் என இந்தியா முழுவதும் பேசப்படும் அவர் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளார். இதனையடுத்து முதல்வர் மாணிக்சர்க்கார் தனது ராஜினாமா கடிதத்தை இன்று ஆளுநரிடம் அளித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close