லாலு மகள், மருமகனுக்கு ஜாமீன்

  SRK   | Last Modified : 05 Mar, 2018 08:22 pm


பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதிக்கும், அவரது கணவருக்கும் வரி ஏய்ப்பு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

மிசா பாரதியும் அவரது கணவரும் சுமார் 8000 கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பு செய்ததாக சி.பி.ஐ வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி, ஜாமீன் கேட்டிருந்தனர்.

டெல்லியை சேர்ந்த சுரேந்திர ஜெயின், வீரேந்திர ஜெயின் என்ற இரண்டு தொழிலதிபர்களுடன் சேர்ந்து லெட்டர் பேட் நிறுவனங்கள் மூலம் சுமார் 8000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக இவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஜெயின் சகோதரர்கள் கைது செய்யப்பட்டு ஜனவரி மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த வழக்கு தொடர்பாக மிசா பாரதிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு ரெய்டு நடந்தியது. பாரதிக்கு சொந்தமான டெல்லி பண்ணை வீடு, வரி ஏய்ப்பு செய்த பணத்தில் வாங்கப்பட்டது, என கூறி கடந்த மாதம் அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், 2 லட்ச ரூபாய் ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்தபின் நீதிமன்றம் இன்று மிசா பாரதிக்கும், அவரது கணவர் சைலேஷ் குமாருக்கும் ஜாமீன் வழங்கியது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close