கேரளா- சட்டசபைக்கு வெடிகுண்டுடன் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ

  Sujatha   | Last Modified : 08 Mar, 2018 05:55 am


கேரள மாநிலத்தின் சட்டசபை கூட்டத்துக்கு வெடிகுண்டுடன் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலத்தில் நேற்று  சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது திடீரென எழுந்து நின்ற, காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தான் கையில் வைத்திருந்த வெடி குண்டை சபாநாயகரிடம் காண்பித்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன்,  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ராதாகிருஷ்ணன் கூறியதாவது: "கடந்த பிப். 26-ம் தேதி கண்ணூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் காங்கிரசோர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இவை இரண்டும் வெடிக்காத குண்டுகள். மாநிலத்தில் போலீசாரின் அராஜகம் அதிகரித்து வருகிறது என்றார்".

ராதாகிருஷ்ணன் கூறியது நியாயமாகவே இருந்தாலும், சட்டசபைக்குள் வெடிபொருள், ஆயுதம் கொண்டு வர சட்டத்தில் இடமில்லை. எம்.எல்.ஏவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சபாநாயகரிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடடர்பாக, சபாநாயகர் கூறுகையில் "விதிகளுக்கு முரணாக இதுபோல் நடந்துகொண்டது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close