தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது தெலுங்கு தேசம்

  SRK   | Last Modified : 08 Mar, 2018 09:13 am


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியில், பாரதிய ஜனதாவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆந்திர எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லாமல் போனதாக தெரிகிறது. நேற்று இரவு நடந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கூட்டணியில் இருந்து விலக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

"எனது முடிவை முதலில் பிரதமரிடம் நேரில் கூற முயற்சித்தேன். அனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. பல ஆண்டுகளாக பொறுமையாக காத்திருந்தோம். மத்திய அரசு அந்தரவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க முன்வரவில்லை" என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close