திரிபுராவின் முதல் பா.ஜ.க முதல்வராக பொறுப்பேற்றார் பிப்லாப் குமார்

  முத்துமாரி   | Last Modified : 09 Mar, 2018 12:45 pm


திரிபுரா மாநிலத்தில் முதல் பா.ஜ.க முதல்வராக  பிப்லாப் குமார் இன்று பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ததகதா ராய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி செய்து சாதனை படைத்த கம்யூனிஸ்ட் கட்சி சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியுற்றது. மத்தியில் ஆளும் பாஜக முதல் முறையாக திரிபுராவில் ஆட்சியமைக்கிறது. திரிபுராவின் முதல்வராக பா.ஜ.கவின் பிப்லாப் குமார் இன்று பதவியேற்றுள்ளார். அவருக்கு அம்மாநில ஆளுநர் ததகதா ராய் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல் துணை முதல்வராக ஜிஷ்ணு தேப் பர்மன் பொறுப்பேற்றார்.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி திரிபுராவிற்கு வருகை தந்துள்ளார். மேலும், அத்வானி, முரளி மனோகர் ஷோஷி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  உள்ளிட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்காரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close