திரிபுரா இடைத்தேர்தலை புறக்கணித்தது இடது முன்னணி

  முத்துமாரி   | Last Modified : 10 Mar, 2018 02:06 pm


திரிபுராவில் லெனின் சிலை சேதம், கலவரம்  ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திரிபுரா இடைத்தேர்தலை இடது முன்னணி கட்சி புறக்கணித்துள்ளது. 

திரிபுராவில் 25 ஆண்டு கால இடது முன்னணி ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாஜக ஆட்சி அமைத்ததையடுத்து திரிபுராவில் இருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. சிலையை உடைத்து விளையாட்டுப்பொருளாக காலில் எட்டி உதைத்தனர். 

இதனை எதிர்த்து திரிபுராவில் வன்முறை வெடித்தது. இது போன்ற பிரச்சனைகளால் சரிலாம் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் இடது முன்னணி கோரிக்கை வைத்தது. ஆனால் தற்போது வரை எந்த பதிலும் இல்லாததால் தேர்தலை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் சரிலாம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close