தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்: ராகுல் காந்தி

  SRK   | Last Modified : 11 Mar, 2018 06:45 am


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, தனது தந்தையை கொலை செய்தவர்களை தானும், தனது சகோதரி பிரியங்காவும் மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை ராகுலும், பிரியங்காவும், மன்னித்து விட்டார்களா என கேட்கப்பட்டது. 

அதற்கு அவர், "நானும், பிரியங்காவும் பல ஆண்டுகளாக ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தோம். மிகவும் காயப்பட்டு, கோபமாக இருந்தோம். ஆனால், காலப்போக்கில் முற்றிலும் அவர்களை மன்னித்து விட்டோம். பிரபாகரன் இறந்து கிடந்ததை டிவியில் பார்த்தபோது, எனக்கு இரண்டு விஷயங்கள் தோன்றின. ஏன் அவரை இவ்வாறு அசிங்கப்படுத்துகின்றனர் என்று முதலில் தோன்றியது. பின்னர் அவரது குழந்தைகளை நினைத்து வருத்தப்பட்டேன்.

ஏனென்றால், இதுபோன்ற சம்பவங்கள் எங்களுக்கு நடந்துள்ளது. என்னால் யாரையும் வெறுக்க முடியாது. வன்முறை பிடிக்காது. பிரியங்காவும் அப்படித்தான்" என்றார் ராகுல்.

மேலும், "என் தந்தை மற்றும் பாட்டி இறந்துவிடுவார்கள் என எனக்கு தெரியும். அரசியலில் சில மோசமான சக்திகளுக்கு எதிராக நின்றால் அது தான் நடக்கும். தான் இறந்துவிடப்போவதாக என் பாட்டி முன்னரே என்னிடம் கூறினார். என் தந்தையின் உயிருக்கு யாராவது ஏற்படும் என நான் அவரிடம் எச்சரித்தேன்" என்றும் ராகுல் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close