ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களுக்கு சோனியா அழைப்பு

  SRK   | Last Modified : 11 Mar, 2018 08:15 am


பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வெற்றிகளை தொடர்ந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பா.ஜ-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகளை விருந்துக்கு அழைத்துள்ளார், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி.

நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் இந்த விருந்தில், பா.ஜ-வுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை நாடு முழுவதும் உள்ள கட்சிகளை சேர்த்து உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். திமுக செயல் தலைவர் முக ஸ்டாலினுக்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவரால் கலந்துகொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"செயல் தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால், 15ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் துவங்குவதால், அவரால் செல்ல முடியாது. அவருக்கு பதில் கனிமொழி கலந்து கொள்வார்" என திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் லாலு பிரசாத் சிறையில் உள்ள நிலையில்,  அவருடைய மகன் தேஜஸ்வி யாதவ் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார். அதேபோல  முன்னாள் பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியும் இதில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close