பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது - நிதின் கட்காரி

  Shalini Chandra Sekar   | Last Modified : 11 Mar, 2018 04:34 pm


மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்துக் கொண்டார். அதில் அவர் அளித்த பேட்டி பின்வருமாறு 

'கடந்த 50 வருடங்களில் காங்கிரஸ் செய்த பணிகளைவிட 4 வருடங்களில் பா.ஜ.க அதிகம் செய்துள்ளது. எங்களது ஆட்சி காலத்தில் பொருளாதாரம் 7.5 சதவீதம் வளர்ந்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வருடந்தோறும் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கி வருகிறது. தற்போது நடந்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக அதிகளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும். விவசாய துறையில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மக்களுக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடமும், 1.88 கோடி ஹெக்டேர் நிலங்கள் விவசாய வசதி பெற்றால், நல்ல காலம் பிறந்தது என அர்த்தமாகிவிடுமா? 

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என நாட்டின் முன் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. என் மக்கள் மகிழ்ச்சியாகவும், பசி, பயம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு வாழ வேலை செய்வதே எனது விருப்பம். லட்சக்கணக்கான சுய நலமில்லா தொண்டர்களின் உழைப்பால் பா.ஜ.,உருவாகியுள்ளது. தொண்டர்கள் உழைப்பு இருக்கும் வரை பா.ஜ., உயிர்ப்புடன் இருக்கும்' இவ்வாறு அவர் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close