சீனா செல்கிறார் நிர்மலா சீத்தாராமன்

  Sujatha   | Last Modified : 13 Mar, 2018 07:24 am


பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் சீனா செல்லவுள்ளார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் சீனா தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், அடுத்த மாத இறுதியில் சீனா பயணம் செல்லவுள்ளேன் என தெரிவித்துள்ளார். ஆனால், சீனா செல்வதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை. டோக்லாம் பிரச்னை தொடர்பாக இந்தியா, சீனா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு நல்லுறவு குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மேலும்  ஜூன் மாதத்தில் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார் எனவே இதுவும் சீத்தாராமனின் சீன பயணத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close