குஜராத் சட்டசபையில் காங்கிரஸ்- பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் மோதல்

  முத்துமாரி   | Last Modified : 14 Mar, 2018 05:48 pm

குஜராத் சட்டசபையில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு இடையே மோதல், அடிதடி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரகாஷ் டுதத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

இன்றைய குஜராத் சட்டசபை கூட்டத்தொடரின் போது, அசரம் பாபு வழக்கு குறித்த நீதிபதி டி.கே.திரிவேதி கமிஷனின் அறிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் அறிக்கையை வீசி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள்  அமளியில் ஈடுபட்டனர். இதனால் பா.ஜ.கவினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் டுதத் திடீரென அங்கிருந்த மைக்கை பிடுங்கி பா.ஜ.க எம்.எல்.ஏ ஜெகதீஷ் பஞ்சாலை தாக்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ அம்ரீஷ் என்பவரும் பா.ஜ.க எம்.எல்.ஏக்களை  தாக்கினார். இதனால் அம்ரீஷை பாஜகவினர் பதிலுக்கு அடித்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் டுதத், பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவைக்குள் காங்கிரஸ் - பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அடித்துக்கொண்டது, ஜனநாயகத்தின் மற்றொரு கருப்பு நாள் என்றே சொல்லலாம். இதனால், அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close