நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தெலுங்கு தேசம் ஆதரவு!

  SRK   | Last Modified : 16 Mar, 2018 01:44 am


ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சி விலக உள்ளதாக கூறப்பட்டது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு தயங்கி வந்ததை தொடர்ந்து, கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜ-விடம் கடும் நெருக்கடி கொடுத்தார். சிறப்பு அந்தஸ்து கிடைக்காத நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

அமைச்சர்கள் ராஜினாமா செய்தாலும், கூட்டணியில் நீடித்து வருகிறது தெலுங்கு தேசம். இதை பயன்படுத்தி ஆந்திர மாநிலத்தின் எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. "பாரதிய ஜனதாவுடனான கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவால் விலக முடியுமா?" என சவால் விட்டு வருகிறார் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. 

எதிர்க்கட்சியின் நெருக்கடிக்கு இடையே, இந்த நம்பிக்கையிலா தீர்மானம் குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, "உண்மையிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். எண்களின் 17 எம்.பி.க்கள் அதற்கு ஓட்டளிப்பார்கள். ஆனால், இது ஏதாவது கூட்டு சதி போல தெரிந்தால், உண்மையை மக்கள் மத்தியில் போட்டு உடைத்து விடுவோம்" என கூறியுள்ளார். 

இதனால், விரைவில் பா.ஜ-வுடனான கூட்டணியில் இருந்து விரைவில் தெலுங்கு தேசம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close