மஜிதியா விவகாரம்: பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர்கள் ராஜினாமா!

  முத்துமாரி   | Last Modified : 17 Mar, 2018 12:00 pm


பஞ்சாப் முன்னாள் அமைச்சர் மஜிதியாவிடம் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதாக டெல்லி முதவளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதனால் மஜிதியா பஞ்சாப் அம்ரிஸ்தர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதன்பின்னர், 'தான் கூறிய கருத்துக்கள் ஆதாரமில்லாதவை தான்' எனக்கூறி மஜிதியாவிடம் மன்னிப்பு கோரினார் கெஜ்ரிவால். இதனால் மஜிதியா நீதிமன்றத்தில் தனது அவதூறு வழக்கை வாபஸ் பெற்றார். 

கெஜ்ரிவால் மஜிதியாவிடம் மன்னிப்பு கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பக்வந்த் மான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அம்மாநில கட்சி துணைத்தலைவர் அமன் அரோராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கெஜ்ரிவால் மஜிதியாவிடம் மன்னிப்பு கேட்டதற்கான சரியான காரணத்தை கூற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியினர் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close