மத்திய அரசை கண்டித்து ஆந்திராவில் முழு கடையடைப்பு போராட்டம்

  முத்துமாரி   | Last Modified : 22 Mar, 2018 01:18 pm


ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளதை இதுவரை செயல்படுத்தவில்லை. மேலும் 2018-19 நாடாளுமன்ற பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை என்பதை  கண்டித்தும் இன்று ஆந்திர மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் சில இடங்களில் பேரணி, சாலை மறியல், ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆந்திர மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close