3வது அணி அமைக்கும் தீவிர முயற்சியில் மம்தா பானர்ஜி

  முத்துமாரி   | Last Modified : 27 Mar, 2018 05:14 pm


மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, காங்கிரஸ், பா.ஜ.க அல்லாத 3வது அணியை அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அவர் ஒருமித்த கொள்கைகளை உடைய எதிர்கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். 

சமீபத்தில் மம்தா பானர்ஜியை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். இன்று டெல்லியில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தி.மு.க எம்.பி கனிமொழி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பி கவிதா ஆகியோரை மம்தா சந்தித்து பேசியுள்ளார். அடுத்ததாக பா.ஜ.கவின் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோரை நாளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்றைய சந்திப்பினையடுத்து மம்தா பேசுகையில், "2019 நாடாளுமன்றத் தேர்தல் கண்டிப்பாக சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும். அரசியல் பிரதிநிதிகளிடம்  அரசியல் பற்றிதான் விவாதிக்கப்பட்டது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close