காவிரி நீரே தான் வேண்டுமானால் அழுது கொண்டுதான் இருக்க வேண்டும்: சு.சாமி

  Padmapriya   | Last Modified : 01 Apr, 2018 05:07 pm

தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டுமானால், அதற்கு தான் வழிசொல்வதாகவும், காவிரி நீர் தான் வேண்டுமானால் அழுது கொண்டு தான் இருக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டரில் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தமிழகம் எங்கிலும் காவிரி நதிநீருக்கானப் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் நிலையில், சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் வேண்டுமானால் என்னால் ஏற்பாடு செய்ய முடியும். கடல் நீரை, சுத்திகரிப்பு முறையில் மாற்றி தர முடியும். ஆனால், காவிரி தண்ணீர் தான் வேண்டுமானால் அழுது கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது கருத்தால் எரிச்சலடைந்த நெட்டிசன்கள் அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close